மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; கௌரவ அமைச்சர் துரை முருகன், 87 வயது, கால் வலி காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது, மேலும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழுவால் வார்டில் அனுமதிக்கப்படுகிறார். வலிக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, […]

ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம்.. 4 போலீசார் சஸ்பெண்ட்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முதல் நிலை காவலர் நரேந்திரன், பெண் காவலர்கள் சரிதா, அம்பிகா, நீலாவதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பணியில் கவனக்குறைவாக இருந்ததை அடுத்து 4 காவலர்களை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டார்.

திருச்சி மருத்துவமனை மீது சிறுநீரக முறைகேடு புகார். விசாரிக்க சிறப்பு குழு

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இடைத்தரகர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிர சிறப்பு புலனாய்வுத் துறையினர் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக திருச்சிக்கு வந்து அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, தமிழக சுகாதாரத் துறை சிறப்புக் குழு அமைத்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “மருத்துவம் – ஊரக நலத்துறை கூடுதல் இயக்குநர் பிரகலாத் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், கண்காணிப்பு அதிகாரி, நிர்வாக அதிகாரி, […]

திமுக நிர்வாகியின் கார் விபத்து…5 பேர் பலி..

ராமநாதபுரம் கீழக்கரை திமுக நகரமன்ற தலைவர் தனது நண்பர்கள் 7 பேருடன் காரில் ஏர்வாடியில் இருந்து கீழக்கரைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்றுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் ராமேஸ்வரம் நோக்கி காரில் சென்ற போது கீழக்கரை கடற்கரை சாலை கும்பிடாமதுரை அல்-மதின் கிராண்ட் ஹோட்டல் அருகே காரை நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த திமுக நகர மன்ற தலைவரின் கார் நேருக்கு நேர் மோதியது. […]

மருத்துவமனை முன்பு நர்சை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், துர்கா அக்ராஹாரத்தை சேர்ந்தவர் விஜய் (40). இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (30). நுஜிவீடுவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளான். திருமணத்திற்கு பிறகு விஜய்க்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு […]