போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவிலிருந்து வந்த பயணி திருச்சியில் கைது

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்குப் பயணிகள் வந்தடைந்தனர். அவர்களை இமிகிரேசன் அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனிவேலு (51) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், பழனிவேலு போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை இமிகிரேசன் அதிகாரிகள் திருச்சி ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பழனிவேலுவை […]

மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா- ரசிகர்கள் குதூகலம்

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று (டிசம்பர் 27) நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது திடீர் மழை பெய்தது. இதனால், விஐபி இருக்கைகளில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது. இந்த சமயத்தில் விஜய்யின் ‘மேகமாய் வந்து போகிறேன்’ பாடல் ஒலிபரப்பப்பட்டது, மேலும் ரசிகர்கள் மழையோடு சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடினர்.