மாநகராட்சி பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட எஸ்எஸ் காலனி அருகே உள்ள கந்தன் சேர்வை நகர், 8வது தெருவில் உள்ள 40 அடி அகல சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பப்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பிலிருந்து, அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்றும், அதனை உறுதி செய்வதற்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை மாநகராட்சி […]