பிப். 4-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வரும் 4.2.2026 (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் […]

யாருடன் கூட்டணி? தேமுதிக ரகசிய வாக்கெடுப்பு

 தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியபோது 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரிவாக தெரிவித்தார். “அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமைக் கட்சிகள் தான். அனைவரும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள். மாவட்ட செயலாளர்களின் கருத்தைப் பொறுத்தே கூட்டணி அமையும்” என்று கூறினார். ராஜ்யசபா சீட் ஏற்கனவே பேசப்பட்டது என்றும், ஆனால் கவனம் சட்டமன்றத் தேர்தலை நோக்கியே உள்ளது என்றும் தெரிவித்தார்.பிரேமலதா மேலும் கூறுகையில், “தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். பொங்கலுக்கு பிறகு […]

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.பொருள்: வரைவு வாக்காளர் பட்டியல் (Draft Electoral Rolls- SIR 2026) சரிபார்த்தல் குறித்து.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.