பனையூரில் பரபரப்பு- தவெக அலுவலக வாயிலில் கண்ணீருடன் நின்ற அஜிதா!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எஞ்சிய மாவட்ட செயலாளர்களை இன்று அறிவிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு 8 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னை பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்றவருக்கு […]