மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்: ஆவடியில் மின்வாரிய அதிகாரி அதிரடி கைது
ஆவடியில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கையும் களவுமாகப் பிடிபட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த ராகவன் (47) என்ற விவசாயி, தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன் (47), மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சமாகத் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். லஞ்சம் கொடுக்க […]
புதிய மின் இணைப்பு வழங்க ரூ.8,000 லஞ்சம்…வணிக ஆய்வாளர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்ன அடைக்கனூரை சேர்ந்த சுகன்யா என்பவரது வீட்டிற்கு புதிய மின் இணைப்புக்கான திட்ட மதிப்பீடு வழங்க வணிக ஆய்வாளர் இளையராஜா என்பவர் ரூ.8,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத சுகன்யா. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி வணிக ஆய்வாளர் இளையராஜாவிடம் லஞ்சப் பணத்தை சுகன்யா கொடுக்க சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை […]