பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகள் மீட்பு
குன்னூர் அருகே பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள் பிடித்ததால் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை பகுதியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியின் பின்புறம் குடியிருப்புகளும், புதர்மண்டிய செடிகளும் அதிகளவில் உள்ளதால் அப்பகுதியில் சாரை, கட்டுவிரியன் உட்பட பலவகை பாம்புகள் பள்ளி வளாகத்தில் சுற்றி திரிவதும், அதனை கண்டு மாணவிகள் அலறி […]
கூவம் ஆற்றிலிருந்து 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்பு
சென்னை, கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தின் வழியாக செல்லும் கூவம் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகளை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (30). இவர் நேற்று காலை பிஞ்சிவாக்கம் கிராமம் வழியாக செல்லும் கூவம் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்றில் இறங்கியுள்ளார். அங்கு ஏராளமான கற்சிலைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சிடையந்த அவர், […]
மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. மீட்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழவெளியூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் 24.இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு மது போதையில் வந்துள்ளார். அப்போது முருக உடையார் என்பவரின் கிணற்றில் தவறி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட பகுதி பொதுமக்கள் மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரமாக போராடி இளைஞரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். மதுபோதையில் இளைஞர் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் […]
ஜோலார்பேட்டை- வீட்டின் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு வட்டம் பகுதியில் வீட்டின் அருகே மலைப்பாம்பு இருந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விருந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் 10 அடி உள்ள மலைப்பாம்பை லாவகமாக மீட்டு காப்பு காட்டுப் பகுதிக்கு விட எடுத்துச் சென்றனர். 10 அடி உள்ள மலைப்பாம்பை மழை நேரத்தில் மலைப்பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
தஞ்சையில் சிக்கிய ”மோதிர வளையன்” பாம்பு
தஞ்சாவூர், கீழவாசல் ராயல்சிட்டி பகுதியை சேர்ந்த விஷ்வா. இவரது வீட்டில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டு அறையில், பாம்பு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனர், சதீஸ்குமார் தலைமையில், லோகநாதன், முத்துப்பாண்டி ஆகியோர் பாம்பை மீட்டனர். அந்த பாம்பு, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிகவும் அரிதாகக்காணப்படும் மோதிர வளையன் எனப்படும் டிரிங்கெட் என்கிற இன பாம்பு என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சுமார் 100 செ.மீ., நீளம் உள்ள […]