போதை ஆசாமி அடாவடி-அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்

கோவையில் மது போதையில் பேருந்து ஏறி நபர் ஒருவர் பேருந்து நிற்காத நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என அடம் பிடித்து நடத்துனரை தாக்கிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை சோமனூர் நோக்கி தடம் எண் 90 என்ற எண் கொண்ட அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் ஒரு நபர் மதுபோதையில் ஏறி உள்ளார். பேருந்து லட்சுமி […]

ரேசன் கடை ஊழியரை தாக்கிய நடிகர் பிரதீப் கைது

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ரேஷன் கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில் பிரபல வில்லன் நடிகர் பிரதீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற படங்களில் நடித்துள்ள இவர், மதுபோதையில் வீரராகவன் தெருவிலுள்ள ரேஷன் கடை ஊழியர்களான கலையரசன் மற்றும் டேனியலுடன் தகராறு செய்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப்பை சிறையில் அடைத்தனர்.