முட்டை விலை மீண்டும் புதிய உச்சம்
நாமக்கல்லில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை இன்று ஒரே நாளில் 5 காசு உயர்ந்து ரூ.6.30ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 55 ஆண்டு கால கோழிப் பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை முதல்முறை ரூ.6.30ஆக உயர்ந்துள்ளது. 6 நாட்களுக்குப் பிறகு முட்டை விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முட்டை விலை வரும் நாட்களிலும் மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உச்சம் தொட்ட முட்டை விலை
முட்டை விலை கடந்த 22 நாட்களாக ரூ 6.10 காசுகளாக இருந்து தற்போது 5 பைசா உயர்ந்து ரூபாய் 6.15 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிர்காலம் என்பதால் முட்டைகளை அதிக விரும்பி சாப்பிடும் எண்ணிக்கை அதிகம் உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இந்த முட்டை விலையை அறிவித்துள்ளது.மற்ற மண்டலங்களின் விலை உயர்வு, உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு, குளிர்காலம் என்பதால் வடமாநிலங்களுக்கு செல்லும் முட்டைகளின் எண்ணிக்கை அதிகம் என பல காரணங்களை கூறி […]