காவல்துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் புதிய கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல்

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பையை வழங்கி, காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் பிரிவின் பயன்பாட்டிற்காக மொத்தம் 360 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் […]

குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை- முதல்வர் அடிக்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.1.2026) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை, கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 417 கோடியே 07 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 2024-25ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், தென் சென்னை பகுதிகளில் குழந்தைகளுக்கான உயர்தர சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளை […]

நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் அடிக்கல்

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. நீர்வளத்துறை சார்பில் ரூ.342.60 கோடி மதிப்பில் மாமல்லன் நீர்த்தேக்கம் கட்டப்படவுள்ளது. 4,375 ஏக்கர் பரப்பளவில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது.