எதிரிகளை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது- முதல்வர் அறிவுரை
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தீவிர தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மதுரையில் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், “நமக்கு சாதகமான சூழ்நிலை இருந்தாலும், எதிரிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. CBI, ED, IT, தேர்தல் ஆணையம் அனைத்தையும் நமக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள். தினந்தோறும் ஏராளமான பொய்கள் பரப்புவார்கள், போலி பிம்பங்களை உருவாக்குவார்கள். இவற்றை எதிர்கொள்ள நமது பலத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். கூட்டம் காணொலி வழியாகவும் நேரடியாகவும் நடைபெற்றது. […]
திமுகவின் SIR வார் ரூம்… முதல்வர் அறிவுரை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள SIR வார் ரூமில் 08065420020 என்ற எண்ணில் நேற்று ஒரு நாள் மட்டும் 627 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. என மக்களிடம் உள்ள பல கேள்விகளை பரிசீலித்து,குழப்பங்களயும், சந்தேகங்களையும் தீர்க்க நடவடிக்கைளை மேற்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்தை திமுக சட்டத்துறை சார்பில் அணுகிட மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பியிடம் முதலமைச்சர் அறிவுறுத்தல்.