மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவு-முதல்வர் இரங்கல்
மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர் ச.சீ. இராசகோபாலன். அவரது மறைவு கல்வித்துறைக்குப் பேரிழப்பு என முதல்வர் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆசிரியராகத் தமது கல்விப் பணியைத் தொடங்கிய முனைவர் ச.சீ. இராசகோபாலன் தமிழ்நாடு அரசு முன்னெடுத்த சமச்சீர்க் கல்விக் குழுவின் […]
நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா காலமானார்.. முதல்வர் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.70 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் தனிப்புகழுடன் வலம் வந்தவர் ராஜண்ணா. தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்கள், மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பல முக்கிய ஆன்மிக நிலையங்களில் ஆஸ்தான வித்வானாக பணியாற்றிய சிறப்புக்குரியவர்.உலகெங்கும் ஒலிக்கும் தமது இசையால் இசைபட வாழ்ந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது […]
நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவு.. முதல்வர் இரங்கல்
புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில், செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான S.R.G. ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். தமது அண்ணன் S.R.G. சம்பந்தமுடன் இணைந்து, 70 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் தனிப்புகழுடன் வலம் வந்தவர் ராஜண்ணா. தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்கள், மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பல முக்கிய ஆன்மீக நிலையங்களில் ஆஸ்தான வித்வானாகப் பணியாற்றிய சிறப்புக்குரியவர். […]