umagine TN- 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு… முதல்வர் துவங்கி வைத்தார்

சென்னை நத்தம்பாக்கத்தில் umagine TN- 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் 2 நாட்கள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனித ரோபோ கைகொடுத்து வரவேற்பு தெரிவித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்துயாகியது.

ரூ.3 ஆயிரம்- பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதல்வர் துவங்கி வைத்தார்

சென்னை ஆலந்தூர் ரேசன் கடையில் பொங்கல் பரிசுதொகை, தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஒரு கிலுோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்று வழங்கப்பட்டது. அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 பரிசுத்தொகையுடன் பொங்கல் தொகுப்பினை வழங்கினார். ரூ. 3 ஆயிரம் ரொக்கத் தொகையை பயனாளிகள் முன்பு எண்ணி வௌிப்படையாக வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுக்கான டோக்கன் பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று தொகுப்பை […]