“இலக்கு 200 தொகுதிகள்”: 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொன்னேரியில் […]

திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் மரணம்: முதல்வர் ஸ்டாலின் தலைவர் இரங்கல்

மொழிப்போர்க் களத்தில், இந்திமொழியின் ஆதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்ட மாணவர் படையின் தளகர்த்தர்களில் ஒருவரும் – கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான எல்.கணேசன் அவர்கள் மறைந்த செய்தியால் பெரிதும் துயருற்றேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.சட்டமன்றம் – சட்டமேலவை – நாடாளுமன்றம் என முழங்கிய அவரை இனி நாம் காண முடியாது என்பதை எண்ணும்போதே உள்ளம் வேதனையால் துடிக்கிறது. தலைவர் கலைஞர் அவர்களின் பாசத்தைப் பெற்ற ‘எல்.ஜி.’ அவர்கள், 1989-இல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது […]

அமைதி, நல்லிணக்கம் நிறைந்த ஆண்டாக 2026 அமையட்டும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வெற்றிகளும் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அனைவருக்கும் அமைந்திட புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 2026 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி: பல வகைகளிலும் தமிழ்நாட்டுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்த 2025க்கு விடைகொடுத்து, இதுவரை காணாத மாபெரும் வெற்றியை வழங்கவுள்ள 2026ல் அடியெடுத்து வைக்கத் தயாராகிறோம். தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் எழுச்சிக்கும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும் மிகச் சிறந்த ஆண்டாக 2025 அமைந்தது என்றால் […]

அம்பேத்கர் வாழ்வே ஒரு பாடம்…முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே […]

டிட்வா புயல் பாதிப்பு…இலங்கை மக்களுக்கு உதவ தமிழகம் தயார்…முதல்வர் மு.க. ஸ்டாலின்

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: – டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இப்பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுக்கிறோம். இலங்கையில் […]