கனமழை எதிரொலி…முன்னெச்சரிக்கை நடவடிக்கை…மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்…

குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் 28 முதல் 30ம் தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும். எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ” 24-11-25 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 25.11.25, இலங்கைக்கு தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி […]