மூடப்படாத பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி: 3 பொறியாளர்கள் சஸ்பெண்ட்
டெல்லியின் ஜனக்புரி பகுதியில் நேற்று இரவு யுவராஜ் சிங் (25) என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்திற்கு அடியில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் (Delhi Jal Board) சார்பில் தண்ணீர் குழாய் பதிப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக சாலையில் ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. வழக்கமான பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பள்ளத்தைச் சுற்றி எச்சரிக்கை பலகைகளோ, தடுப்புகளோ அல்லது இரவு நேரத்தில் தெரியும் வகையிலான விளக்குகளோ வைக்கப்பட்டிருக்கவில்லை. […]