உபியை வாட்டி வதைக்கும் கடும் குளிர்
உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிரும், அடர் மூடுபனியும் பொதுமக்களை நிலைகுலையச் செய்துள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புத்தாண்டு தினத்தில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் சூரியனைக் காண முடியாத அளவுக்கு மேகமூட்டத்துடனும், அடர் மூடுபனியுடனும் காணப்பட்டது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலையில் சற்று உயர்வு இருக்கும் என்பதால் மக்கள் சற்று […]