பஞ்சப்பூர்-கருமண்டபம் வரை… புறவழிச்சாலை அமைக்கும் பணி… மேயர் ஆய்வு..
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகளை மேயர் அன்பழகன் இன்று (26.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பஞ்சபூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை தொகுப்பு-I – கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்படுகிறது.சாலையின் மொத்த நீளம் – 2 […]
தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு
தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்தது. இந்த நிலையில், தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் மேயர் சண்.ராமநாதன் இன்று (புதன்கிழமை) காலை திடீரென ஆய்வு செய்தார். அப்போது நடைமேடையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்த வியாபாரிகளிடம் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கடைகளை அமைக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், நடைமேடைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அங்கு […]