வாக்காளர் பட்டியலில் 1.63 லட்சம் போலி பெயர்கள்: 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் – தேர்தல் ஆணையம் அதிரடி
வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த 7 அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் போது சுமார் 1.63 லட்சம் தகுதியற்ற வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக வங்கதேசம் எல்லையை ஒட்டியுள்ள கூச் பெஹார், மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு, தெற்கு 24 பர்கானா ஆகிய 5 மாவட்டங்களில் போலி ஆவணங்களைப் […]
சிறுமி கூட்டு வன்கொடுமை – திரிணாமுல் நிர்வாகி கைது
மேற்கு வங்காளத்தில் 16 வயது சிறுமி ஒருவரை அவரது காதலனும், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியும் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூக்லி மாவட்டம் உத்தரபிரா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, நேற்று தனது காதலனுடன் அங்குள்ள ஒரு கைவிடப்பட்ட தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த இடத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகி திபன்கர் அதிகாரி வந்துள்ளார். திபன்கரும் சிறுமியின் காதலனும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. […]
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…4 பேர் படுகாயம்
மேற்கு வங்காள மாநிலம், தெற்கு பர்கானஸ் மாவட்டம், சம்பஹிதி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று மதியம் தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட, காயமடைந்தவர்களை […]