கிறிஸ்துமஸ்-புத்தாண்டு.. தூத்துக்குடி-மைசூருக்கு சிறப்பு ரயில்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையும், அதன் பின்னர் புத்தாண்டு பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. மேலும் அரையாண்டு விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் குடும்பத்தோடு தென்மாவட்டங்களுக்கு திரும்புவர். இதையொட்டி தெற்கு ரயில்வேயில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இம்மாத இறுதியில் இயக்கப்பட உள்ளன. அந்த அடிப்படையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட வருவோருக்கு மைசூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் […]