கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில் மோதி 7 யானைகள் பலி…இன்ஜின், 5 பெட்டிகள் தடம் புரண்டன
மிசோரம் தலைநகர் அய்ஸ்வால் அருகே உள்ள சாய்ராங் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு சாய்ராங் டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விரைவு ரயில் நேற்று அதிகாலை 2.17 மணியளவில் அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டம் சாங்ஜூரை கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் இருந்து தண்டவாளத்தை கடந்து சென்ற 8 யானைகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பெரிய […]