திடீர் பிரேக் பழுதானதால் சாலை தடுப்பில் மோதி அரசு பஸ் விபத்து

செங்கல்பட்டு அருகே ஜிஎஸ்டி சாலை மேம்பாலத்தில் சென்றபோது பிரேக் பழுதானதால் சாலை தடுப்பில் மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனரின் சாதூரிய செயலால் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்றுமுன்தினம் மதியம் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்து செங்கல்பட்டு அருகே இருங்குன்றம்பள்ளி ஜிஎஸ்டி சாலை மேம்பாலத்தில் சென்றபோது, டிரைவர் பிரேக் அடித்தார். ஆனால் திடீரென பிரேக் பழுதான […]