2027 ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்- வைரமுத்து

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஜனவரி 25, 2026) கவிஞர் வைரமுத்து அவர்களின் இல்லத்திற்கு தனிப்பட்ட முறையில் வருகை தந்தார். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையேயான நீண்டகால நட்பின் அடையாளமாக அமைந்தது. வைரமுத்து தனது X பதிவில் இந்த சந்திப்பை விரிவாகப் பகிர்ந்துள்ளார்.வைரமுத்து தனது பதிவில் ரஜினியை “பாசமுள்ள மனிதனப்பா – நான் மீசவச்ச குழந்தையப்பா” என்ற வரிகளுக்கு இலக்கியமாக இலங்குபவர் என்று புகழ்ந்துள்ளார். “வியப்புக்குரிய மனிதர்தான்” என்று குறிப்பிட்ட அவர், அரைநூற்றாண்டாக அரசியல் வெள்ளத்தையும் சமூகப் புயலையும் […]

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது… செல்வப்பெருந்தகை வாழ்த்து

செல்வப்பெருந்தகை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரைத்துறையில் 50 வருடங்களை நிறைவு செய்ததற்காக கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.50 வருடங்களை அவர் நிறைவு செய்திருந்தாலும் இப்போதும் சலிப்பில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினிகாந்தை வாழ்த்துகிறோம். இன்னும் பலப்பல விருதுகளைப் பெற்று திரையுலகிலும் புகழுடன் வாழ விரும்புகிறோம்.” என்று இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

சர்வதேச திரைப்பட விழா துவக்கம்- ரஜினிக்கு சிறப்பு விருது

56- வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, நவ 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இது உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது.அந்தவகையில் 56- வது ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. […]

ரஜினியின் 173வது படத்தை இயக்கும் தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 173-வது படமான தலைவர் 173 குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரஜினி ஜெயிலர் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார், அது 2026 ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தலைவர் 173 இயக்குநர் யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கமல் ஹாசன் தயாரிப்பாளராகவும், சுந்தர் சி இயக்குநராகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் நவம்பர் 13 அன்று சுந்தர் சி “எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்” […]