ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயம்- ஜன.,12 முதல் அமல்
ரயில்வே நிர்வாகம், ஐஆர்சிடிசி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஏற்கனவே இந்த விதிமுறை அமலில் உள்ள நிலையில், ஜனவரி 12 முதல் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. டிசம்பர் 29 முதல் நேரக் கட்டுப்பாடுகளுடன் ஆதார் இணைப்பு சரிபார்க்கப்படும். ஜனவரி 12 முதல், ஆதார் இணைத்தவர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
பொங்கல் டிக்கெட் விற்பனை… சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களில் அனைத்து ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. முக்கியமாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முயற்சி செய்தவர்களுக்கும், காலை 5 மணி முதலே கவுன்டரில் காத்திருந்த பயணிகள் பலருக்கும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.