விபசார வழக்கு போடுவதாக பெண்ணை மிரட்டிய ஏட்டு…ரூ.2 லட்சம் அபராதம்…
விபசார வழக்கு போடுவதாக, பெண்ணை மிரட்டிய போலீஸ் ஏட்டுவுக்கு, 2 லட்சம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தஞ்சை மாவட்டம், பெரிய புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறேன். கணவரை பிரிந்து வாழும் எனக்கு, 5 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2021 ஏப்ரலில், புதுக்கோட்டைக்கு வரவேற்பாளர் பணிக்காக நான்கு பேர் சென்றோம். அங்குள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். […]