மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழக மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்.1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு […]
மகளிர் உரிமைத்தொகைரூ.2,000- அதிமுக தேர்தல் வாக்குறுதி
MGR-ன் 109-வது பிறந்தநாளையொட்டி 2026 தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை EPS சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதில், மகளிர் நலன் குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் போல ஆண்களுக்கும் நகர பஸ்களில் இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கில் ரூ.2,000… இதை மறக்காதீங்க.. தமிழக அரசு
PM KISAN திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா 2,000 வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த தவணை 2026 பிப்ரவரியில் டெபாசிட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய விவசாய அடையாள எண்ணை பதிவு செய்யுமாறு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அட்டை, நில உரிமை ஆவணங்களுடன் தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது.