கோவையில் “ராயல்டி” ரவுடித்தனம்: லாரிக்கு ரூ.1000 கட்டாய வசூல் – அதிகாரிகளுடன் உரிமையாளர்கள் கடும் வாக்குவாதம்
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வரும் டிப்பர் லாரிகளை வழிமறித்து, ஒரு கும்பல் சட்டவிரோத பண வசூலில் ஈடுபட்ட சம்பவம் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் செங்கல், மணல் மற்றும் ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல அரசு முறையாக அனுமதிச் சீட்டு வழங்கி வருகிறது. இந்நிலையில், மலுமிச்சம்பட்டி சாலையில் லாரிகளை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, “அரசு அனுமதிச் சீட்டு செல்லாது, ராயல்டி கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.500 […]