லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் – பிஹைண்ட் நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று அதிகாலை பலத்த பனிமூட்டம் நிலவிய சூழலில், ஒரு கார் குவாலியர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் நான்கு பேர் பயணித்தனர். அவர்களில் ஒருவர் போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். கார் மகராஜ்புரா என்ற பகுதியை அடைந்தபோது, எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் […]