கோவை: சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர் கைது
கோவை மாவட்டம் அன்னூர் அருகே மணிக்கம்பாளையத்தில் உள்ள ‘அகஸ்டியன் நிட்வேர்’ என்ற தனியார் நிறுவனத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாகப் பணிபுரிவதாகக் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், நேற்று நள்ளிரவு போலீசார் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இந்தியாவில் தங்குவதற்கு எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி அங்கிருந்த 11 வங்கதேசத்தினரை போலீசார் பிடித்துள்ளனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தில் தலா 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து புரோக்கர்கள் மூலம் கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் ஊடுருவியதாகத் […]
டெல்லியில் அதிரடி: போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது
டெல்லியில் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்து வந்த 25 வங்கதேசத்தினரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் டெல்லி போலீசார் நகரின் பல இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்து பிடித்து விசாரித்தனர். அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்தபோது, அவர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்து, உள்ளூர் […]
அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது
அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள், வங்கதேசத்திற்கு செல்லும் துப்ரி, ஸ்ரீபூமி அல்லது தெற்கு சல்மாரா-மன்கச்சார் வழியாக அசாமை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரை அசாம் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர். இது குறித்து முதல்வர் […]