வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பர்வதிபாட்யா என்ற இடத்தில் 7 மாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு ஜவுளி கடைகள், கிடங்குகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில், இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் இன்று காலை எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. தீ விபத்து குறித்து தகவலறிந்து 22 தீயணைப்பு வாகனங்களில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை […]