கும்பகோணத்தில் பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்
தஞ்சாவூர் – கும்பகோணத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம். நீதிமன்றங்களில் உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் இ து நடைமுறைக்கு வந்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் […]
புதுகை கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
புதுக்கோட்டை யில் நீதிமன்றம் வளாகத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். வழக்கறிஞர் சங்க தலைவர் முத்தையன் தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரியும், சேமநல நிதியை உயர்த்த வலியுறுத்தியும், இ. பைலிங் முறையினை ரத்து செய்யவும் வலிறுதி கோஷங்களை எழுப்பினர். மூத்த வழக்கறிஞர் கே கே. செல்ல பாண்டியன், சிற்றரசு, ஆதிமூலம், ராமநாதன், பழனிவேல், அருள்மொழிவேந்தன், சிவா, ராஜபாண்டி, சுஜாதா உள்ளிட்ட […]