‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ்- ஐகோர்ட் தள்ளுபடி
ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதையடுத்து ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி படத்தை தயாரித்த நிறுவனமான கேவிஎன் புரடெக்சன், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் […]
பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் மீது வழக்கு
கோவாவில் கடந்த 2025 நவம்பர் 28ம் தேதி நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில், பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொண்டார். அப்போது மேடையில் இருந்த அவர், ‘காந்தாரா’ படத்தின் இயக்குனரும், ஹீரோவுமான ரிஷப் ஷெட்டி முன்னிலையில், கடலோர கர்நாடக மக்களால் மதிக்கப்படும் பஞ்சுருளி மற்றும் குலிகா தெய்வங்களின் பாவனைகளை கேலி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சவுண்டி தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் வர்ணித்ததாகவும், தெய்வீக கலைவடிவத்தை கிண்டல் செய்ய வேண்டாம் என்று […]
சபரிமலை தங்க திருட்டு வழக்கில் 2 மணி நேர விசாரணை- நடிகர் ஜெயராமின் வாக்குமூலம் என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் என்ன மாதிரியான தகவல்களை தெரிவித்தார் என்பதை பார்ப்போம். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசியபோது 4.5 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதாவது 42.8 கிலோ எடை இருந்த தங்கம், சென்னையில் செப்பனிடப்பட்டு திரும்ப ஒப்படைக்கும் போது 38 கிலோவாக குறைந்தது. […]
ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேர் விடுவிப்பு
ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜல்லிக்கட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பெண்கள் உள்பட 57 பேர் விடுவிப்பு; 2017ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது
நகைக்காக பெண் கொலை வழக்கில் ஒருவர் கைது
சென்னை சூளைமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அமுதா என்பவர் கொல்லப்பட்டு, 14 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சாந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனநாயகன் வழக்கில் 9ம் தேதி தீர்ப்பு
சென்சார் போர்டு வாதத்தை ஏற்று தீர்ப்பு ஜன. 9ம் தேதிக்கு தள்ளவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். ஜனநாயகன் படம் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது நிலையில் அன்று தீர்ப்பு தருகிறது நீதிமன்றம். அன்றே படமும் வௌியாக வாய்ப்புள்ளது. ஜனநாயகனுக்கு எந்த தணிக்கை சான்று என்று 9ம் தேதி தீர்ப்பு அளிக்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா.
”ஜனநாயகன்” சென்சார் சான்றிதழ் வழக்கு- நாளைக்கு ஒத்திவைப்பு
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்,நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக […]
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுக-பியூஷ் கோயல்
திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மலையில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சனாதனத்தை தாக்குவதையே திமுக அரசு வழக்கமாக கொண்டுள்ளது என்றும், இந்த விவகாரத்திலும் இந்து விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது
கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தது. குனியமுத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியர் ஜெபா மார்ட்டின் வீட்டில் டிசம்பர் 25ல் 103 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்பவரை கைது செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு.. மேலும் ஒருவர் கைது
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலையில் இருந்து 4.54 கிலோ தங்கம் திருடப்பட்டது. தங்கம் திருட்டு வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில மாநாட்டின் போது கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் மற்றும் அதில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், இன்று காலை 10:30 மணியளவில் பின்வரும் 4 நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்: புஸ்ஸி என். ஆனந்த் (தவெக பொதுச்செயலாளர்) ஆதவ் அர்ஜுனா (தவெக மாநிலத் துணைப் […]
சிவாச்சாரியார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஆயுள் தண்டனை
சேலம் சிவாச்சாரியாரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(45). இவர் தனது தந்தை ராமமூர்த்தியுடன், தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரில் வசித்து வந்தார். மேலும், அங்குள்ள சிவன் கோயிலில் ராமமூர்த்தியும், ஆடுதுறை சிவன் கோயிலில் மணிகண்டனும் சிவாச்சாரியார்களாக பூஜை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2015 ஜூன் 12ம் தேதி திருவைக்காவூரை சேர்ந்த கார்த்தி(39), சிவாச்சாரியார் மணிகண்டனிடம் தனது திருமணத்திற்கு புரோகிதம் செய்ய வேண்டும் […]
தஞ்சையில் +2 மாணவரை கடத்தி சென்ற வழக்கில் 4 பேர் கைது
தஞ்சை கீழவாசல் படைவெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். லாரி டிரைவர். இவரது மனைவி ரோமியோ. இவர்க ளின் 17 வயது மகன் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த மாணவர் வழக்கம்போல் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பள்ளியில் இருந்து வெளியில் வந்துள்ளார். இதை நோட்டமிட்டு 2 மோட்டார் சைக்கிளில் வெளியில் காத்திருந்த மாணவர்கள் சிலர் பள்ளி […]