திருச்சி மன்னார்புரம் அருகே விபத்து: முதியவர் பலி

திருச்சி மன்னார்புரம் அருகே இன்று அதிகாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் உடல் சிதைந்து அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் அளித்த புகாரின் பேரில், தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். […]

காரை திறந்தபோது வாகனம் மோதி உயர் நீதிமன்ற வக்கீல் பரிதாப பலி

பெங்களூருவில் சாலையோரம் நின்ற கார் கதவைத் திறந்தபோது, அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரு உல்லால் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (40). கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர், நேற்று காலை 11 மணியளவில் உல்லால் 80 அடி சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு வெளியே இறங்கினார். ஓட்டுநர் இருக்கையின் கதவைத் திறந்து சாலையில் நின்றுகொண்டிருந்தபோது, பின்னால் மின்னல் வேகத்தில் வந்த கார் அவர் […]