ஒரு பிரேசிலிய பெண் 22 முறை வாக்களிப்பு- ராகுல் குற்றச்சாட்டு
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் நடந்த தேர்தலில் வாக்குகள் ஆன்லைன் மூலம் நீக்கப்பட்டு, பல்வேறு வாக்குகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி முன்னதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில், போலி வாக்குகள் மூலம் அரியானா என்ற ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை ராகுல் காந்தி கூறியுள்ளார். இது குறித்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான ஆதாரங்களை ‘ஹெச் பைல்ஸ்’ (H Files) என்ற பெயரில் வெளியிட்டு ராகுல் காந்தி பேசினார். […]