திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
திருச்சி இபி ரோடு, லூர்துசாமி பூங்கா அருகே போதை மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகக் கோட்டை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கமல நேரு பகுதியை சேர்ந்த காளிமுத்து (19) என்பது தெரியவந்தது. அவர் அந்தப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததை […]
பாத்ரூமில் ரகசிய வீடியோ எடுத்த வாலிபர் கைது
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் 46 வயது பெண். இவர் தனியார் நர்சிங் ஹோமில் வேலை செய்துவருகிறார். இவருடன் பணியாற்றிவரும் செவிலியர்கள் 11 பேர், எஸ்ஆர்பி காலனி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். கடந்த 12ம் தேதி 46 வயது பெண், செவிலியர்கள் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஒருவர் வந்து, ‘’அடிக்கடி உங்களது வீட்டு பாத்ரூம் அருகே செல்போனில் ஒருவர் வீடியோ எடுப்பதுபோல் தெரிகிறது’’ என்று தெரிவித்துள்ளார். இதனால் அந்த […]
இன்ஸ்டாகிராமில் பெண்ணிடம் ரூ.16 லட்சம் ஆசை காட்டி ரூ.8.45 லட்சம் மோசடி
சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரின் இன்ஸ்டாகிராமுக்குகடந்த டிசம்பர் மாதம் ஒரு அறக்கட்டளை பெயரில் குறுந்தகவல் வந்தது. அந்த பெண் அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர், நான் அறக்கட்டளை நடத்தி உதவி செய்து வருகிறேன் என்றும், உங்களுக்கு ரூ.16 லட்சம் கொடுத்து உதவி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் அவர் இந்த பணத்தை பெற வேண்டும் என்றால் […]
திருச்சியில் ஆட்டோ பேட்டரியை திருடிய வாலிபர் கைது
திருச்சி கே.சாத்தனூர் கலிங்க நகர் 4 -வது தெருவை சேர்ந்த வர் பாலகிருஷ்ணன் (42). ஆட்டோ டிரைவர். இவர் கே சாத்தனூர் ரயில்வே கேட் அருகே தன் ஆட்டோவை நிறுத்தி விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த 2 பேட்டரிகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்த சஞ்சய் (20 )என்ற […]
மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து எட்டையபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், காரை ஓட்டி வந்த கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான மதன்குமார் என்பவர் மது அருந்திவிட்டு போதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது. அவரது கவனக்குறைவாலும் […]
திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…
திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டிப்பட்டி பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு வாலிபர் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் இதையடுத்து மற்றொரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் கையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை […]
திருச்சி-ரியல் எஸ்டேட் புரோக்கரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
திருச்சி கருமண்டபம் வசந்த நகர் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (52. )ரியல் எஸ்டேட் புரோக்கர் . இவரது மைத்துனர் கேகே நகர் பாரி நகரை சேர்ந்த முத்தமிழ் குமரன் (வயது 36) என்ற ரவுடிக்கும் பணம் ,கொடுக்கல் வாங்கலில் முன் விரோதம் இருந்தது இந்நிலையில் முத்தமிழ்குமரன் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிச 24ந் தேதி முத்தமிழ் குமரனின் தூண்டுதலில் பேரில் முத்தமிழ் […]
பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து செல்பி: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அவற்றை அணிந்து மகிழ்ந்த வினோத நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு ஹெப்பகோதி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் அமல். இவர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் முன்புறம் காயப்போடப்பட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளைத் தேடிப் பிடித்துத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அவ்வாறு திருடிச் செல்லும் உடைகளைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அவற்றை அணிந்து பார்த்துக் கொள்வதோடு, அதனை வீடியோவாகவும் செல்பியாகவும் எடுத்து ரசித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் […]
போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது
திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சஞ்சீவி நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரோஷன் (22, )என்பவர் அதே பகுதியில் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 35 போதை மாத்திரைகள் 2 ஊசிகள் 2 சலைன் வாட்டர் பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் தடையற்ற புகையிலை விற்பனை: பெரம்பலூர் வாலிபர் கைது
திருச்சி கருமண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலையைப் பறிமுதல் செய்தனர். திருச்சி செசன் கோர்ட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகப் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்சி கருமண்டபம் ஜே.ஆர்.எஸ் நகர் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். […]
திருச்சியில் ஆட்டோ டிரைவரின் செல்போன் திருட்டு: பெங்களூரு வாலிபர் கைது
திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (57). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று தனது ஆட்டோவை திருச்சி எம்.ஜி.ஆர் சிலை அருகே நிறுத்தியிருந்தார். அப்போது தனது மொபைல் போனை ஆட்டோவிலேயே வைத்துவிட்டு, சிறிது தூரம் தள்ளிச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோவில் இருந்த செல்போனைத் திருடிக்கொண்டு தப்பியோடினார். செல்போன் திருடப்பட்டது குறித்து முகமது உசேன் செசன் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் […]
17 வயது மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள பழைய திருச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி மெய்யப்பன் அந்த மாணவியைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, […]
நாய்க்கு மது கொடுத்ததை வீடியோ எடுத்து பெருமைப்பட்ட நண்பர்கள்: சிக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் கீர்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் தனது கிராமத்தில் உள்ள தெருநாய்க்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்துள்ளார். தெருநாய்க்கு ஜிதேந்திரா மதுபானம் கொடுப்பதை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.இந்த வீடியோ வைரலான நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தெருநாயை கொடுமைபடுத்தி அதற்கு மதுபானம் கொடுத்த ஜிதேந்திராவை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜிதேந்திரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஓட்டலில் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டி மோசடி…வாலிபர் கைது
தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை QR ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பும்போது அந்தப் பணம் ஓட்டல் உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு வராமல் இருந்துள்ளது. இதனையடுத்து ஓட்டல் உரிமையாளர் கியூஆர் கோடு (QR Code) ஸ்கேனரை சோதனை செய்ததில் அதில் வேறொருவின் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.(22.12.2025) NCRP-2 (National Cybercrime Reporting Portal) அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. […]
பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது
சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசி உள்ளார். அவர், பிரதமர் மற்றும் முதலமைச்சர் வீடுகள் மற்றும் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், கன்னியாகுமரி பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (32) என்பதும், அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த போது இதுபோன்ற மிரட்டல் வேலையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கைக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்த முயற்சி…வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் மணிகண்டன், இருதய ராஜ்குமார். இசக்கிமுத்து, முதல் நிலைக் காவலர் பழனி பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் இன்று அதிகாலையில், தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் சிப்காட் பகுதியில் தூத்துக்குடி துறைமுகம்- மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கார் […]
10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்… வாலிபர் கைது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியிடம் 18 வயது வாலிபர் ஒருவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில், சிறுமிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளானது தெரிய வந்தது.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பட்டாபிராம் […]
ஜிஎச்-ல் ஜெனரேட்டரின் பேட்டரி திருட்டு.. திருச்சியில் வாலிபர் கைது
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் பிளான்ட் உள்ள அறையில் பேட்டரி யுடன் ஜெனரேட்டர் இயந்திரம் இருக்கிறது. இந்நிலையில் அங்கு சென்ற வாலிபர் ஒருவர் ஜெனரேட்டர் பேட்டரியை கழற்றிக் கொண்டு இருந்தார்.அப்பொழுது அந்த வழியாக பராமரிப்பு பணிக்காக வந்த உதயகுமார் என்ற ஜூனியர் அசிஸ்டன்ட் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.பிறகு அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது எடமலைப்பட்டி […]
ஒரு ரூபாய் கேட்டு பெண்ணிடம் ரூ.14 ஆயிரம் மோசடி
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சாந்தி (31). மதுரவாயலில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர், பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்து இறங்கிய வாலிபர் ஒருவர், சாந்தியிடம், “நான் ஆட்டோவில் சவாரி வந்தேன். டிரைவருக்கு ரூ.300 கொடுக்க வேண்டும். கையில் பணம் இல்லை. ரூ.300 கையில் கொடுத்தால் அதனை ‘ஜிபே’யில் அனுப்பி விடுவதாக” கூறினார்.அதற்கு சாந்தி சம்மதம் தெரிவித்தார். இதனால் தனக்கு ஒரு ரூபாய் அனுப்புமாறு கூறினார். அதன்படி சாந்தியும், […]
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… வாலிபர் கைது
தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில், கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46). இவர் நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டிசென்று நேற்று காலையில் கோவிலை திறந்து பார்க்கும்போது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து இசக்கிபாண்டி நேற்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயகுமார்(19) என்பவர் கோவில் […]
கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
சென்னை கிண்டி ஈஸ்வரி ரத்தினம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராம் நித்திஷ் (26). தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினீயராக பணி புரியும் இவரது கார் நேற்று அதிகாலை, திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த ராம் நித்திஷ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரில் எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தார். எனினும் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து அவர் கிண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கிண்டி, மடுவாங்கரையை சேர்ந்த விஜய […]
போதை மாத்திரைகள் விற்பனை – வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை கம் ஸ்டோன் ரயில்வே ட்ராக் அருகே உள்ள பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட,உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் வந்தது.இதை எடுத்து பாலக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் போதை மாத்திரைகள் […]
தஞ்சையில் டூவீலர் திருடிய வாலிபர் கைது
தஞ்சை மாரியம்மன்கோவில் ஜெயஸ்ரீ நகரை சேர்ந்தவர் மு.முகமது அலி ஜின்னா (49). இவர் நேற்று வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடி பார்த்தும் பைக் கிடைக்கவில்லை. இதுகுறித்து முகமது அலி ஜின்னா தாலுகா போலீசில் புகார் செய்தார். இதேபோல் தஞ்சை மானோஜிப்பட்டி சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சுசீதரன். இவரது மனைவி ராதிகா (41). இவர் கடந்த அக்.30ம் தேதி தனது […]
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறல்-வாலிபர் கைது
சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் வல்லரசு (26) இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பூனைக்குட்டி பள்ளம் பகுதியில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று தவறாக நடந்து கொண்டுள்ளார் . இதனை அறிந்த அக்கம்பக்கதவர் கத்தி கூச்சலிட்டதால் வாலிபர் அங்கு இருந்து தப்பி சென்றார். பின்னர் அந்த வாலிபரை விரட்டிப்பிடித்து ஜோலார்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர் இதன் காரணமாக […]