திருவண்ணாமலையில் மகா தீபத்தை தரிசிக்க மலை ஏறிய வாலிபர் சாவு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி மகா தீபம் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிக்கும். அதன்படி, நேற்று 7-வது நாளாக மலை உச்சியில் மகா தீபம் காட்சியளித்தது. இதற்கிடையில் மலை ஏறி சென்று மகா தீபம் காண மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் […]