இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: வாலிபர் தலை நசுங்கிப் பலி

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (59) என்பவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் (20) என்ற வாலிபர் அதிவேகமாகத் தனது பைக்கை ஓட்டி வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக கோபிநாத்தின் பைக் முருகேசனின் வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, கீழே விழுந்த […]

சேலம் தவெக கூட்டத்தில் வாலிபர் பலி… சந்தேக மரணம் என வழக்கு

சேலம் :  மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் (தவெக / TVK) நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று (பிப்ரவரி 13, 2026) சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றிய இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கடுமையான வெயில் தாக்கம் இருந்த நிலையில், கூட்டத்தில் ஒரு நபர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நபர் சூரஜ் (37) என்பவர் ஆவார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் சேலத்தில் தங்கியிருந்தவர். கூட்டத்தில் வலிப்பு ஏற்பட்டு […]

மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி வாலிபர் பலி..

கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பக்தர் உடல் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது. மாதேஸ்வரன் மலைக்கு பாதையாத்திரையாக சென்ற பக்தர் பிரவீன் (30) சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். மேட்டூர் – மைசூரூ சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற நீச்சல் போட்டி: பறிபோன உயிர் – தவிக்கும் குழந்தைகள்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டியின் போது, நீச்சல் போட்டியில் பங்கேற்ற குடும்பத் தலைவர் ஒருவர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேராவூரணி அருகே உள்ள பெரிய தெற்கு காடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (40). திருமணமான இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், ஆனைக்காடு ரோடு பகுதியில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவையொட்டி, பிள்ளையார் கோயில் அருகே இருந்த குளத்தில் நீச்சல் போட்டி […]

மஞ்சள் காமாலைக்கு வாலிபர் பலி- திருவாரூரில் சோகம்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கிளரியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (38). கடந்த சில நாட்களாகக் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு, பரிசோதனையில் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் உள்ளூரில் சிகிச்சை பெற்று வந்த சிலம்பரசனின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், கல்லீரல் பாதிப்பு தீவிரமடைந்த […]

ஸ்ரீரங்கம்- ரயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத ஆண் பலி

ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது தக்க ஆண் நபர் அவ்வழியே சென்றபோது பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எதிர்பாராத விதமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்த நபர் வெள்ளை நிற வேஷ்டி மட்டும் அணிந்திருந்தார். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீஸ் அட் இன்ஸ்பெக்டர் அபிராமி விரைந்து சென்று அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

வங்கி ஊழியர் மாயம்- கார் மோதி வாலிபர் பலி-திருச்சி க்ரைம்

பணிக்குச் சென்ற வங்கி ஊழியர் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (56)பொன்மலை பட்டியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 27ம் தேதி காலையில் வேலைக்கு சென்றார்.பின்னர் பணி இடத்திலிருந்து மாலையில் திரும்பினார் ஆனால் வீட்டுக்கு செல்லவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் .ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து அவரது மனைவி பூங்கொடி பொன்மலை போலீசில் புகார் செய்தார். அதன் […]

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பலி

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் நாய் கடித்து ரேபிஸ் பாதித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.