பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.10,000 லஞ்சம்: குளித்தலை விஏஓ கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வடவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை (64). இவரது நிலப் பட்டாவில் பெயர் தவறாக இருந்ததால், அதனைத் திருத்தம் செய்யக் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் வடவம்பாடி கிராம நிர்வாக அலுவலராக (VAO) சிவக்குமார் (48) என்பவர் பணியில் சேர்ந்தார். பெயர் மாற்றத்தைச் செய்து தர சிவக்குமார், விவசாயி சின்னத்துரையிடம் 10,000 ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னத்துரை, இது குறித்து […]
இறப்பு சான்றிதழுக்கு ரூ. 5000 லஞ்சம்-திருச்சியில் விஏஓ கைது
திருச்சி மாவட்டம், துறையூர் பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராமத்தில் பிரபு(42) விஏஓ ஆக கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். விஏஓவிடம் வைரபெருமாள்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி கந்தசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது தாயார் கடந்த 07.12.2025 அன்று இறந்துவிட்டார். இது தொடர்பாக கந்தசாமி வாரிசு சான்று கேட்டு இணையத்தில் தகுந்த ஆவணங்களுடன் 24.12.2025 அன்று விண்ணப்பம் செய்துள்ளார். இது தொடர்பாக 31.12.2025 அன்று பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு விஏஓ பிரபுவை அவரது அலுவலகத்தில் சந்தித்த போது வாரிசு சான்று […]
பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம்… விஏஓ கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் தனது தாயார் பெயரில் இடத்தை கிரையம் செய்துள்ளார். பெயர் கூற விரும்பாத புகார்தாரர் தனது தாயார் பெயரில் பட்டா பெயர் மாறுதல் செய்ய வேந்தோணி விஏஓ கருப்புசாமி (58) தொடர்பு கொண்டுள்ளார். அப்போது என்னிடம் வரவில்லை, வந்தவுடன் சொல்கிறேன் என கூறி மனுதாரரின் போன் நம்பரை வாங்கியுள்ளார். தொடர்ந்து மனுதாரரின் மொபைல் எண்ணுக்கு பட்டா பெயர் மாறுதலாகி விட்டதாக மெசேஜ் வந்ததாக அழைத்துள்ளார். பின்னர் நான் பரிந்துரை செய்ததால் […]
வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்… வி.ஏ.ஓ கைது…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ்(36). இவர் கட்டுமான வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் வீரம்மாள் இறந்துவிட்டார். வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினார்.மகாதானபுரம் வடக்கு விஏஓ பிரபு(46) என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் […]