சபரிமலை தங்கம் திருட்டு… எஸ்ஐடி விசாரணை- கேரளா ஐகோர்ட்
சபரிமலை தங்கத் திருட்டு குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் எஸ்.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது என கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை தேவசம் போர்டு கண்காணித்து வருகிறது எனவும் கேரளா ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் பதில் மனு தாக்கலுக்கு பின் விசாரிப்பதாக கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
MBA மாணவி கழுத்து நெரித்து கொலை.. நண்பன் எஸ்கேப்- விசாரணை
மத்திய பிரதேசத்தில் எம்பிஏ மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிஏ படித்து வந்த 24 வயது மாணவி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது வகுப்பு தோழரான பியூஷ் தனோட்டியா என்பவருடன் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அந்த மாணவி மாயமான அன்றைய தினமே அவரது செல்போனில் இருந்து கல்லூரி வாட்ஸ்அப் […]
கரூர் சம்பவம்-9 பேரிடம் சிபிஐ விசாரணை
கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக இன்று 1 உதவி காவல் ஆய்வாளர், 2 பெண் காவலர்கள்,2 ஆண் காவலர்கள், 2 ஊர்காவலர் படையினர் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர் என 9 பேர் விசாரணைக்கு ஆஜர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் […]
சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கைது… விசாரணை
சபரிமலை துவாரபாலகர் சிலை தங்க கவச திருட்டு விவகாரத்தில் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரருவை கைது செய்து சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. துவார பாலகர் சிலைகள், கதவு நிலைகளில் பதித்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. 2019இல் தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் முதியவர் தற்கொலை- விசாரணை
திருச்சி மேல சிந்தாமணி மாதுளங்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். (69) இவருக்கு தீராத வயிற்று வலி மற்றும் கிட்னி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் தங்கவேல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி லட்சுமி புகாரின் அடிப்படையில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையிலான போலீசார் தங்கவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி […]
ராமஜெயம் கொலை வழக்கு.. திருச்சி காவேரி தியேட்டரில் டிஐஜி வருண்குமார் விசாரணை
திமுக அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு இதே நாள் மார்ச் 29ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே நடைபயிற்சிக்கு வந்தபொழுது கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு திருச்சி கல்லணை அருகே உடல் வீசப்பட்டு இருந்தது. இந்நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அப்போது திருச்சி மாநகர காவல்துறை தனிப்படைகளை அமைத்து தேடிவந்தனர். அதற்கு அடுத்ததாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு ராமஜெயத்தின் மனைவி லதா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து […]
கரூர் விசாரணை- ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு வருகை… கலெக்டர் வரவேற்பு
கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகை: மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முகாமிட்டுள்ள […]
கரூர்… மின்வாரிய அதிகாரிகள் 7 பேரிடம் சிபிஐ விசாரணை
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள்,தவெக வழக்கறிஞர், நிர்வாகிகள், மின்வாரிய அதிகாரிகள், ஆம்புலன்ஸ் […]
கரூர் சிபிஐ விசாரணையில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் ஆஜர்
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள்,தவெக வழக்கறிஞர், நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். கரூர் […]