ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பேசக்கூடாது- நடிகை திரிஷா காட்டம்

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13ம் தேதி சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “நடிகை திரிஷாவைவிட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்” எனப் பேசியது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. நடிகை திரிஷா குறித்த நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் குறித்து பொறுப்பில் இருக்கும் கட்சி […]

விஜய் அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்… அமைச்சர் மா.சு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.6.64 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஐந்து புதிய மருத்துவக் கட்டிடங்கள் மற்றும் உயர்நிலை மருத்துவ கருவிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.2.44 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன நீராவி சலவை கூடத்தையும், ரூ.1.20 கோடி செலவில் […]

விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் – நயினார்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஒரு மாதத்தில் துவங்கும், வியூகம் அமைப்பதற்கு இரண்டு மாதங்கள் தேவையில்லை, இரண்டு மணி நேரமே போதுமானது என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மோடி முகாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. சத்துணவு, […]

விஜயுடன் திவாகரன் சந்திப்பால் பரபரப்பு- சசிகலா அதிரடி திட்டம்

தமிழ்நாட்டில் சட்டமன்ற பொது தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்து வந்த அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், திடீரென அதிமுக – பாஜ கூட்டணியில் சேர்ந்து விட்டார். ஓ.பன்னீர் செல்வமும் அதே கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளார். ஆனால் சசிகலா எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வந்தார். அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும், ஒரு முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார். சொத்து குவிப்பு […]

கட்சித் தலைவருக்கான தகுதியை விஜய் வளர்த்து கொள்ள வேண்டும்: நயினார் அட்வைஸ்

சேலம்: ஒரு கட்சி தலைவராக இருந்துக்கொண்டு, கட்சியினுடைய ஆண்டு விழாவில் ஆடுறது தான் விஜய்யின் கொள்கை என பாஜ தலைவர் சாடி உள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு எங்கள் கூட்டணி வலுவாயிருக்கிறது. அண்ணாமலை தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியதற்கு உட்கட்சி பூசல் ஒன்றும் இல்லை. அவருடைய அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் அடுத்த முறை நான் எல்லா நிகழ்ச்சிக்கும் போறேன்னு […]

விஜய் மீது நடவடிக்கை: போலீஸ் கமிஷனரிடம் இந்து முன்னணி புகார்

தவெக 3ம் ஆண்டு துவக்க விழாவில் தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தி பாடல் பாடிய பாடகர், தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவுசெய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணியின் மாநில செயலாளர் குற்றாலநாதன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றி கழகம் 3வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியை […]

அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை- முதல்வர்

முதல்வர் ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு முடிவுற்ற பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 புதிய ரேஷன் கடைகள், ரத்தி சுத்திகரிப்பு நிலையம், மறுவாழ்வு மையம் ஆகியவற்றை ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து கொளத்தூரில் நடந்து சென்று மக்களையும் சந்தித்தார்.அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் பல்வேறு தரப்பு மக்களும் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனால் ஸ்டாலின் மட்டுமல்லாமல் அவருடன் இருந்த நிர்வாகிகளும் […]

விஜய் தன் சம்பளத்தை வௌிப்படையா கூறுவாரா?ஜெயக்குமார் கேள்வி

அதிமுகவை விமர்சிக்கும் விஜய் தனது சம்பளம் எவ்வளவு என வெளிப்படையாக கூறுவாரா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ‘விஜய் வாங்கும் சம்பளத்தில் “கறுப்பு” அதிகம்; “வெள்ளை” குறைவு. ஆதவ் அர்ஜூனாவின் லாட்டரி பணத்தில்தான் தான் தவெக கட்சியே நடக்கிறது.  யார் யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று விவஸ்த்தை இல்லை.விஜய் இப்படி மேடையில் நடனமாடியதால் கரூரில் இறந்த 41 பேரின் குடும்பம் எவ்வளவு வேதனைப்படும்’ எனவும் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

விஜய் திருக்குறள் அவரது தோழர்களை உற்சாகப்படுத்த- அமைச்சர் மகேஸ்

விஜய் திருக்குறள் கூறியது அவர்கள் தோழர்களை உற்சாகப்படுத்த என திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை முன்னிட்டு திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் காமராஜர் சிலையில் இருந்து மௌன ஊர்வலமாக சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அண்ணாசிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் […]

விஜய் ஊழல்வாதியா இல்லையா?- திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

 விஜய் ஊழல்வாதியா இல்லையா? நீங்கள் வாங்கும் சம்பளம் நியாயமானதா? என்று திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுகவை ஊழல் கட்சி என மீண்டும் கூறிய விஜய்க்கு திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், செங்கோட்டையனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தான் ஊழல்வாதி இல்லை என்பதை விஜய் நிரூபித்துவிட்டு அதிமுகவை ஊழல்வாதி என சொல்லட்டும்,” இவ்வாறு தெரிவித்தார்.