தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கடும் கண்டனம்
சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்களிடம் கள ஆய்வு (சர்வே) பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனுமதியின்றி சர்வே எடுப்பதாகக் கூறி திமுகவினர் அவர்களைத் தடுத்ததாக சொல்லப்படுகிறது. இது இரு தரப்பினரிடையே வாக்குவாதமாக மாறி, பின் கைக்கலப்பாக உருவெடுத்தது. போலீசார் விரைந்து வந்து தடுத்ததால் பெரிய அளவிலான மோதல் தவிர்க்கப்பட்டது. இந்த வன்முறை குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள […]