திருவள்ளுவர் தினம்- குடியரசு தினம்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினம் என டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தினங்களில் மதுபானங்கள் விற்றால் கடும் நடடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: வருகிற 16ம் தேதி திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை), 26ம் தேதி குடியரசு தினம் (திங்கட்கிழமை) மற்றும் பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் வள்ளலார் நினைவு தினம் வருகிறது. இந்த தினங்களில் மதுபான சில்லறை […]
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை- நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள்… கட்டுபாடுகள் விதிப்பு
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ‘நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.வனப்பகுதிகளுக்குள் வீடியோ எடுக்கவும், டிரோன் பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். hidden spots என்ற குறி சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதைபோல் hidden spots பாதுகாப்பு இல்லாத வனப்பகுதி என்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி […]
புதுச்சேரியில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை
புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. பொதுக்கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உப்பளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசிதி பெற்றதாகும். அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்வான மகா தீபதிருவிழா நாளை நடைபெற உள்ளது.இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பக்தர்கள் நாளை மலையேறவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.