விண்டோஸ் மென்பொருள் கோளாறு…விமான சேவை பாதிப்பு…
நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் விண்டோஸில் உலகளவில் பெரிய அளவிலான சேவை செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சேவைகள்/செக்-இன் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நான்கு விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மைக்ரோசாப்ட் மற்றும் விமான நிறுவனங்களிடமிருந்து உடனடியாக பதில் எதுவும் கிடைக்கவில்லை. ஹைதராபாத்தின் […]