சத்தீஸ்கரில் கோர விபத்து: 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உட்பட 4 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூர் நகரில் இருந்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக ராய்ப்பூர் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் தாம்தரி மாவட்டம், காப்ரி பைபாஸ் பகுதி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த கார் ஒன்றின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் மற்றும் வீரர்கள் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். […]
இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்…இன்ப அதிர்ச்சி
இறந்தவர் மீண்டும் திரும்பி வந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் அசாமில் நடந்துள்ளது. மேகாலயா சுரங்க விபத்தில் தொழிலாளி ஷியாம் பாபு உயிரிழந்ததாகக் கருதி, ஒரு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் உடலை தகனம் செய்தனர். இந்நிலையில், 3 நாள்களுக்கு பிறகு ஷியாம் பாபு உயிருடன் வீடு திரும்பி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போ, தகனம் செய்த உடல் யாருடையது? என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் 10 மாத குழந்தை மூளைச்சாவு- 5 பேருக்கு புதிய வாழ்வு
கேரளா-சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரஹாமின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கு புதிய வாழ்வு கிடைக்கவுள்ளது. இதய வால்வு, கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை தானம். இதன் மூலம் கேரளாவில் மிக இளம் வயதில் உடலுறுப்பு தானம் செய்த குழந்தை என்ற பெயர் கிடைத்துள்ளது.
அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்
திருச்சி, உறையூர் தாத்தையாங்கார்ரோடு மருதப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (65). இவர் நேற்று மாலைதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையில் நடந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவரை பின் தொடர்ந்து வந்த மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்ற அரசு பேருந்து எதிர்பாராதமாக ராஜலட்சுமி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ராஜலட்சுமி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் […]
பாராமதியில் விபத்து- விமானத்தில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை
அஜித் பவார் சென்ற விமானத்தை இயக்கிய விமானி சுமித் கபூர் மிகவும் அனுபவமிக்கவர் என்று விமான நிறுவன அதிபர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அஜித் பவார் சென்ற விமானத்தை தரையிறக்கியது விமானி சுமித் கபூர் எடுத்த முடிவுதான். முதலில் ஓடுபாதை எண் 29ல் தரையிறக்க முயன்றார், இயலாததால் ஓடுபாதை எண் 11ல் தரையிறக்கினார். விமானம் நன்றாக பராமரிக்கப்பட்டு வந்தது; அதில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் பலி
நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் டோடா பகுதியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. 17 ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வாகனம் சுக்குநூறாக நொறுங்கியதில், 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மற்ற […]
சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி
சென்னையில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது மோதியது. லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கோகுல்ராஜ், தனாய் மண்டல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை பள்ளிக்கரணை அருகே லாரி மோதியதில் டூவீலரில் சென்ற அருணாச்சலம் (51) என்பவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்- விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை சரமாரி தாக்கிய பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகர் பகுதியில் சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்பு கற்கள் ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக செல்லும் கனரக டிப்பர் லாரிகளால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடையும் நிலை தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இன்று அரியலூர்-பெரம்பலூர் புறவழிச்சாலையில் இருந்து, அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலை நோக்கி சுண்ணாம்பு சுரங்கத்திற்கு சென்ற கனரக டிப்பர் லாரி, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ராயம்புரம் ஊரைச் சேர்ந்த ரங்கராஜ் மீது மோதியது. இதில் காயம் அடைந்து ரத்தம் […]
மதுபான லாரி – கார் மோதி கோர விபத்து…டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில், லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்திலிருந்து இன்று அதிகாலை கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரியை, அகில் கிருஷ்ணன் (30) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் இருங்கடன்பள்ளி அருகே லாரி வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, எதிரே வந்த கார் மீது மோதிய லாரி, அடுத்த வினாடியே சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் […]
வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டிராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற லாரியை முந்துகையில் லேசாக உரசவே, கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையின் நடுவே கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்குள்ளான வேனில் 15 நபர்கள் பயணம் செய்ததாகவும், அதில் 6 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். […]