சென்னை-டில்லி செல்லயிருந்த ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு

சென்னை உள்நாட்டு முனையம் டெர்மினல் 4ல் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று காலை 6 மணிக்கு டெல்லி புறப்பட தயாரானது. விமானத்தில், 165 பயணிகள் 6 விமான ஊழியர்கள் உட்பட 171 இருந்தனர். விமானத்தின் இயந்திரங்களை விமானிகள் சரி பார்த்தனர். அப்போது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானிகள் கண்டுபிடித்தனர். உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் டெல்லி […]

கட்டுப்பாட்டை இழந்த விமானம்.. குளத்திற்குள் விழுந்து நொறுங்கியது

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பம்ராவ்லி விமான தளத்தில் இருந்து, இந்திய விமான படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த விமானத்தில் தலைமை விமானி பிரவீன் அகர்வால் மற்றும் சுனில் பாண்டே ஆகிய இரண்டு விமானிகள் பயணித்தனர். மதியம் சுமார் 12:30 மணியளவில் ராம்பாக் பகுதி அருகே பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த விமானம் அருகில் இருந்த நீர் செடிகள் […]

டிரம்ப் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விமானமான ஏர் ஃபோர்ஸ் சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்தில் வாஷிங்டன் ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் தளத்திற்குத் திரும்பியது. விமானம் புறப்பட்ட பிறகு, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த பணியாளர்கள் “ஒரு சிறிய மின்சாரக் கோளாறை” கண்டறிந்ததாகவும், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தைத் திருப்புவது என முடிவு செய்யப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தொடர்ந்து அதிபர் டிரம்ப் மற்றொரு விமானமான ஏர் ஃபோர்ஸ் சி-32 விமானத்தில் தனது பயனத்தை […]

சென்னை வந்த விமானத்தில் மாரடைப்பால் பெண் பலி

வங்கதேசத்தைச் சேர்ந்த அக்லிமா அக்தர் (32) என்ற பெண், நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக நேற்று சென்னைக்கு தனியார் விமானத்தில் அழைத்து வரப்பட்டார். சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது நடுவானில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியதும் மருத்துவக் குழுவினர் பரிசோதித்தபோது, பெண் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. உயிர்தப்பிய 140 பேர்

அகமதாபாத் சென்ற ஏர் இந்தியா விமானம் தீ விபத்து எச்சரிக்கை காரணமாக பாதியிலேயே டெல்லிக்கு திரும்பியது. டெல்லியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு நேற்று இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் சுமார் 170 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, விமானத்தின் சரக்குகள் வைக்கும் பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறுவது போன்ற அபாய எச்சரிக்கை விமானியின் அறையில் ஒலித்தது. இதனால் பெரும் பரபரப்பு […]

செங்கல்பட்டு…விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு..

செங்கல்பட்டு, திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான விமானப்படை விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு சிதறிய பாகங்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. திருப்போரூரில் உள்ள தனியார் உப்பு தொழிற்சாலையின் அருகே நேற்று விழுந்து விபத்துக்குள்ளான பயிற்சி விமானம். இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தின் பாகங்களை தேடும் பணி தொடர்கிறது.

‘ஏர் இந்தியா’ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…டெல்லியில் தரையிறக்கம்…

கனடாவில் உள்ள டொரண்டோ விமான நிலையத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இன்று காலை டெல்லி நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறைக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர். அதே சமயம், விமானத்தில் இருந்த ஊழியர்கள் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டனர். இதனை […]