சென்னை உட்பட 5 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இண்டிகோ’ விமான நிறுவனத்துக்கு நேற்று பிற்பகல் 3:30 மணியளவில், ‘இ – மெயில்’ மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், ‘சென்னை, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் குண்டு வெடிக்கும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. எனினும் வெடிகுண்டுகள் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதை தொடர்ந்து, மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து உத்தர பிரதேசத்தின் […]