விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் சென்ற பயணியை தாக்கிய ஏர் இந்தியா விமானி

டெல்லியை சேர்ந்தவர் அங்கித் திவான். இவர் தனது 4 மாத கைக்குழந்தை, குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட வெளியூர் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார். இதையடுத்து, அங்கித் இன்று தனது குடும்பத்துடன் டெல்லி விமான நிலையம் வந்துள்ளார். அவர் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்தின் 1வது முனையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பிற பயணிகளுடன் அங்கித் குடும்பத்துடன் காத்து நின்றுள்ளார். இந்நிலையில், அங்கித் கைக்குழந்தையுடன் காத்து நின்றதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் […]

திருவாரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.. டிஆர் பாலு

திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, திருவாரூர் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதாலும், ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலங்கள் அதிகம் இருப்பதாலும் இங்கு ஒரு விமான நிலையம் அவசியம் என்பது டி.ஆர். பாலுவின் வாதம். திருவாரூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் தர்கா மற்றும் சிக்கல் சிங்காரவேலவர் […]

பிரதமர் வருகை…கோவை விமான நிலையத்தில் கட்டுப்பாடு…

கோவை மாவட்டம் கொடிசியாவில் வருகிற 19ம் தேதி விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துப் பேசுகிறார். மேலும், இந்த மாநாட்டில் இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடனும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடவும் இருக்கிறார். இந்த மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ஆம் தேதி கோவை வர இருக்கிறார். இதன் காரணமாக மாநாடு நடைபெற உள்ள கொடிசியா மைதானம், கோவை விமான நிலையம், பிரதமர் நரேந்திர மோடி வந்துச் செல்லும் பாதை […]