விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல்- டிரோனில் கண்டுபிடிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல் நடந்தது டிரோன் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட ஆய்வில் விதி மீறல் உறுதி செய்யப்பட்டால் 20 கல்குவாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான்- கனிமொழி ஸ்பீச்
விருதுநகர்: மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் கல்லுக்குறிச்சி கலைஞர் திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி […]
விருதுநகரில் நாளை இளைஞரணி மண்டல மாநாடு… முதல்வர் அழைப்பு
திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம் என விருதுநகரில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு நாளை நடைபெறுவதை ஒட்டி முதலமைச்சர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘1949ல் இளைஞர்களால் தொடங்கப்பட்ட கட்சிதான் திராவிட மாடல். திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம். திமுகவை வளர்த்த இளைஞர்கள்தான் தற்போது அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். எங்களுக்கு அடுத்தபடியாக திமுகவை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கின்ற பணியை உதயநிதி சிறப்பாக செய்கிறார். திமுக […]
விருதுநகர் அருகே மினி வேன் விபத்து: 2 பெண்கள் பலி
திருநெல்வேலியில் இருந்து பொள்ளாச்சிக்கு 11 கூலித்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி வேன், விருதுநகர் நெடுஞ்சாலையில் இன்று விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மேம்பால தடுப்புச்சுவரில் மோதியதில், வேனில் இருந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாளி தண்ணீரில் மூழ்கி 2வயது குழந்தை பலி..
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 2வயது குழந்தை வாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. வாளி தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கிய குழந்தையை மீட்டு தாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.