புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் கைது
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் இவரது மனைவி சகுந்தலா (43). இவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.பிறகு சகுந்தலாவை ஜாமினில் விடுதலை செய்தனர்.
ஒரு மாத குழந்தை விற்பனை.. பெற்றோர் உட்பட 8 பேர் கைது
சென்னை காசிமேட்டில் ஒரு மாத ஆண் குழந்தையை ரூ.3.80 லட்சத்திற்கு விற்பனை செய்த பெற்றோர் உட்பட 8 பேர் போலீசார் கைது செய்தனர். குழந்தையை விற்பனை செய்த திலகவதி – சகாயராஜ் தம்பதி தனக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளதால் விற்பனை செய்ய முடிவெடுத்ததாக வாக்குமூலம். மீட்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தஞ்சை உழவர் சந்தையில் பொங்கல் பொருட்கள் அமோகம்
நாளை உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ள தைத்திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் உழவர் சந்தையில் பூ,வாழை இலை, வாழை பழம்,மஞ்சள் கொத்துகள், கரும்பு,காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை மலிவான விலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர். உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் பரபரப்பான விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் தினமான நாளையும் (15.01.2026) விடுமுறையின்றி உழவர் சந்தை செயல்படும் என்று உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் ஜெய்ஜிபால் தெரிவித்துள்ளார்.
புகையிலை பொருட்கள் விற்பனை.. 2 பேர் கைது… டூவீலரில் மணல் கடத்தல்… திருச்சி க்ரைம்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகர்பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று அங்கு பார்த்த போது அஷ்ரப் அலி (25) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று உறையூர் பகுதியில் பெருமாள் கோவில் தெரு பகுதியில் […]
திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 5 பேர் கைது
திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மருத்துவ பிரதிநிதி மற்றும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.1.62 லட்சம் மதிப்பிலான 4000 போதை மாத்திரைகள் , ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தங்கம் விலை சவரன் ரூ.94,400 க்கு விற்பனை
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.94,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.176 க்கு விற்பனை ஆகிறது.