ஆட்சிப் பங்கு பேச்சு – கூட்டணியில் பிளவு இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்” என்று வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சு கூட்டணி கட்சிகளிடையே ஏற்படும் சில கோரிக்கைகள் மற்றும் பதட்டங்களை குறிப்பதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உடனடியாக விளக்கம் அளித்துள்ளார். “எந்தவித பிளவும் இல்லை. […]

குளித்தலை குவாரியில் நடந்தது என்ன?..எம்எல்ஏ பழனியாண்டி தரப்பு விளக்கம்

கரூர் மாவட்டம் , குளித்தலை அடுத்த அய்யர்மலையில் எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தாமான குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் திருச்சி செய்தியாளர் கதிரவன் மற்றும் கேமராமேன் செபாஸ்டியன் ஆகியோர் தாக்கப்பட்டதாக செய்தி வௌியாகியது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் எம்எல்ஏ தரப்பு விளக்கம் வௌியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களை தாக்கினாரா ஸ்ரீரங்கம் MLA திரு.பழனியாண்டி??? எம்எல்ஏவின் குவாரிக்கு நியூஸ் தமிழ் செய்தியாளர் செபஸ்டினும் கதிரவனும் சென்றதன் காரணம் என்ன?? இவரை இயக்கியவர் யார்?? நெல்லை […]

சிவகங்கை பஸ் விபத்து… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

சிவங்கை பஸ் விபத்து குறித்து மதுரையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது… சிவகங்கை, கும்பங்குடியில் 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இச்சம்பவம் பெரும் வருத்தமளிக்கிறது. 2 டிரைவர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் நடந்த கோர விபத்து இது. அஜாக்கிரதையால் பேருந்து விபத்து நடந்துள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர்களின் பணிச்சுமை குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று இவ்வாறு தெரிவித்தார்.